சேலம் மாவட்டம், மேச்சேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மல்லிகுந்தம் மற்றும் கோனூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 75 பேர் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்த வன்னியர் சங்கத்தின் முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் முருகன், கோனூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர்கள் சம்பத், குருசாமி, முருகன் மற்றும் பாமக பிரமுகர்களான ஆடலரசன், சேட்டு, ரமேஷ் உள்பட 75 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற
இந்த நிகழ்வின் போது மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மேச்சேரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் செல்வம், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜரத்தினம், விவசாய அணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், மாணவர் அணி செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மீனவர் அணி ஒன்றிய செயலாளர் சேகர், ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் அன்புமணி, கூட்டுறவு சங்க தலைவர் ஈசன், முன்னாள் கவுன்சிலர் முருகன் இலக்கிய அணி இணை செயலாளர் ராஜா கண்ணு, மாணவர் அணி துணைச் செயலாளர்கள் விமல் ராஜ், பிரவீன் குமார், முன்னாள் கிராம செயலாளர் குணசேகரன் உள்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Post a Comment