சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையின், உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மைய தொடக்க விழா.
சேலம் நியூரோ பவுண்டேஷன்
மருத்துவமனையின், உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மைய தொடக்க விழா தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.நடராஜன் ,மூளை நரம்பியல் துறை தலைவர் பிரபாகரன், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையின் முன்னாள் துணைவேந்தரும், இயக்குநருமான டாக்டர்.சதீஷ் சந்திரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தனர்.மேலும், சேலம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர்.மணி, நரம்பியல் துறைத்தலைவர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். முன்னதாக டாக்டர்.சதீஷ் சந்திரா பேசுகையில், "மூளை நரம்பியல் பிரச்னைகளில்
தலைவலிக்கு அடுத்தபடியாக, வலிப்பு அதிக நபர்களை பாதிக்கிறது. வலிப்பு என்பது ஒரு நோய் அல்ல. மனிதர்களின் மூளையில் திடீரென ஏற்படும் அதீத மின்சார ஓட்டத்தின் வெளிப்பாடே வலிப்பு ஆகும். இதுபற்றி போதுமான விழிப்புணர்வு இன்றி, தவறான புரிதல்களுடன், வலிப்புக்கான முறையான சிகிச்சைகளை பெறாமல் உள்ளனர். நரம்பியல் மருத்துவ அறிவியல் துறையில், வலிப்பு பற்றிய ஆய்வுகள் வலிப்புக்கான சிகிச்சைகளை மிகவும் மேம்படுத்தியுள்ளன. புதிய மருந்துகள், வலிப்புக்கான மூளை அறுவை சிகிச்சைகள் மற்றும் வலிப்புக்கான பிரத்யேக மூளை ஸ்கேன் போன்ற வற்றின் மூலம், வலிப்பினை முழுமையாக குணப்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றார்.
Post a Comment