குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கானோர் அம்மன் கோயில் முன்பு திரண்டதால் பரபரப்புசேலம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற சாதம் குவித்து வேண்டுதல் வைபவத்தில் பரபரப்பு.
சேலம் சாமிநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் தை அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றது.அம்மனுக்கு காய்கறிகள், சிறுதானியங்கள், கீரை வகைகளை சாதத்துடன் கலந்து கும்ப படையல் என்ற பெயரில் படையல் வைத்து பூஜை செய்யப்பட்டன.இந்த படையலை வாங்கி செல்லும் பக்தர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நாள்பட்ட வியாதிகள் இருப்பின் தீரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. மேலும் அம்மனுக்கு படைத்த அன்னத்தை சாப்பிட்டு வந்தால் நோய் நொடிகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது. அமாவாசை என்பதால் சிறப்பு பலன் கிடைக்கும் என்று கருதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதற்கண்டே குவிய தொடங்கினர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுதல் வைத்தனர் திருமண வரம் வேண்டி ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் சூலாயுதத்தில் கட்டியும் வேண்டுதல் வைத்தனர்.
வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கும்ப படையல் சாதத்தை பிரசாதமாக வழங்கப்பட்டது. சேலத்தில் கடந்த இரு மாதங்களாக அமாவாசை தினத்தன்று மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதலே இந்த கோயில் முன்பு திரண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment