சேலத்தில் வீரபாண்டி ராஜா நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி. வி எஸ் ஏ கல்வி நிறுவனங்களில் இயக்குனர் மலர்விழி ராஜா தகவல்.
சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள வி.எஸ்.ஏ கல்வி நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் மலர்விழி ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறும் போது சேலம் வி எஸ் ஏ கல்வி நிறுவனம் மற்றும் சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து வீரபாண்டி ராஜா நினைவு கைப்பந்து போட்டிகளை வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் நடத்துகிறது.
இந்த போட்டியில் மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அணிகளுக்கு முறையே முதல் பரிசாக 10000ஆயிரம், இரண்டாம் பரிசாக 8 ஆயிரம், மூன் றாம் பரிசாக 6 ஆயிரம், நான்காம் பரிசாக 4 ஆயிரம் மற்றும் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது
போட்டு நடைபெறும் நாட்களிலும் பங்கேற்று விளையாடும் வீரர்களை ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரி வளாகத்திற்கு அழைத்து வர பேருந்து வசதி, தங்கும் வசதி, உணவு என அனைத்தும் வழங்கப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் பிரிவுகளில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.
இதற்காக கல்லூரி வளாகத்தில் 4 மைதானம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாநில அளவிலான கைப்பந்து போட்டி பகல், இரவு ஆட்டமாக நடக்கி றது என தெரிவித்தார். பேட்டியின்போது சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணை தலைவர் ராஜாராம், துணை செயலாளர் வடிவேல், வளர்ச்சி குழு தலைவர் வேங்கையன் ஆகியோர் உடனிருந்தனர்.
Post a Comment