சேலம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் கணவருடன் திடீர் தர்ணா போராட்டம்..தன்னுடைய வார்டுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரப்படுவதில்லை என குற்றச்சாட்டு.
சேலம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் கணவருடன் திடீர் தர்ணா போராட்டம்..தன்னுடைய வார்டுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரப்படுவதில்லை என குற்றச்சாட்டு..
சேலம் ஊராட்சி ஒன்றியம், மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் 11 வது வார்டு உறுப்பினர் மேகலா கண்ணன் முறையாக ஊராட்சி கூட்டம் நடத்தவில்லை மற்றும் 11 வது வார்டுக்கு உட்பட்ட சுந்தர் நகர் துளசி நகர் நியூ சுந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாரபட்சம் பார்த்து புதிய வேலைகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை என கூறி ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார், இது பற்றி தகவல் அறிந்த சேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அனுராதா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்தனர், அதன் பிறகு ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் ஆறுமுகம் ஊராட்சி மன்ற செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர், அப்போது மல்லமூப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கூட்டம் முறையாக நடத்தப்படுகிறதா ? பஞ்சாயத்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தினார், மேலும் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக வசதிகள் செய்து தரப்படுகிறதா எனவும், ஊராட்சி கூட்டம் பாரபட்சம் இல்லாமல் முறையாக நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினார், மேலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவரிகளிடம் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினார், இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர் இதனையடுத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை குறித்து விசாரணை நடத்தினார், பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக 11 வது வார்டு உறுப்பினர் மேகலா கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Post a Comment