தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி இல்லத்தில் அவரது தலைமையில் முன்னாள் முக்கிய அமைச்சர்களின் திடீர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி இல்லத்தில் அவரது தலைமையில் முன்னாள் முக்கிய அமைச்சர்களின் திடீர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இடைத்தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது. இக்கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி ,தங்கமணி சி.வி சண்முகம் ,கே.பி முனுசாமி ,கருப்பண்ணன் ,திண்டுக்கல் சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment