எடப்பாடி அருகே பேக்கரிக்கு தேநீர் அருந்த வந்த வாலிபரின் இருசக்கர வாகனம் தீ பிடித்ததால் பரபரப்பு.
சேலம் எடப்பாடி அருகே தேநீர் அருந்துவதற்காக பேருந்து நிலையம் எதிரே உள்ள பேக்கரி கடைக்கு ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் வந்து நின்ற போது திடீரென எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து செய்வதறியாது திகைத்த வாலிபர் பேக்கரியில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார் ஆனால் தீ மேலும் பரவ தொடங்கியதையடுத்து பேக்கரியின் ஊழியர்களும் இணைந்து தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அதிர்ஷ்டவசமாக தீ முற்றிலும் அணைக்கப்பட்டதால் பேக்கரி ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இது சம்பந்தமாக சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
Post a Comment