அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் திடீர் ஆலோசனை.
அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்
கடந்த நான்கு நாட்களாக சேலத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வந்தார்
இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை வளர்மதி செல்லூர் ராஜு தங்கமணி ஓஎஸ் மணியன் பெஞ்சமின் உள்ளிட்ட 14 முன்னாள் அமைச்சர்களை சேலத்திற்கு வரவழைத்து ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசகையில் ஈடுபட்டார்
ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்று இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்
காங்கிரஸ் வேட்பாளர் வி கே எஸ் இளங்கோவனுக்கு எதிராக அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாகவும் தேர்தல் வியூகம் அமைப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
Post a Comment