தாட்கோ மூலம் கடன் வழங்குவதற்க்காக தனி வங்கியை ஏற்படுத்த வேண்டும் தொழிலார் விடுதலை முன்னனி நிர்வாகிகள் தொழிலாளர் கூட்டத்தில் தீர்மானம்.
விடுதலை முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நான்கு ரோடுபகுதியில் நடைபெற்றது. மாநில துணை செயலாளர் சரசுராம் ரவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்தமிழக அரசு பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழகம் முழவதும் பஞ்சமி நில மீட்பு குழ அமைக்க வேண்டும்.தாட்கோ பயணாளிகளுக்கு தனி தாட்கோ வங்கி உருவாக்கிட வேண்டும்.மத்திய, மாநில அரசு வழங்கிடும் பல்வேறு தலித் மக்களுக்கான கடன் திட்டங்களை வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டபடி வழக்கு பதிய வேண்டும். அரசு நிலங்களை நமக்கு நாமே திட்டத்தை தவறாக பயன்படுத்தி வரும் ரியல்எஸ்டேட் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்தவர்களிடமிருந்து மீட்டு தலித் ஏழைகளினம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு துணை போகும் கிராம அதிகாரிகள், வட்டாட்சியர்கள், பதிவு துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும் , பணி நீக்கம். செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Post a Comment