சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறைகளில் கட்டண கொள்ளை நடைபெறுவதை கண்டித்தும் குற்ற சம்பவங்களை தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர் தமிழ்நாடு கர்நாடகா கேரளா ஆந்திரா ஆகிய மாநில மக்களை இணைக்கும் முக்கிய பேருந்து நிலையமாக சேலம் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது தினம்தோறும் இந்த பேருந்து நிலையத்திற்கு 500 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது இதன் மூலம் சுமார் 20000 பேர் தினந்தோறும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான சைக்கிள் பைக் ஸ்டாண்ட் பொதுகழிப்பிடம் உள்ளது சேலம் மாநகராட்சி விதிப்படி அரசு விதித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் ஆனால் அதற்கு மாறாக கழிப்பிடத்திலும் சைக்கிள் ஸ்டாண்டிலும் அதிக அளவில் கட்டணம் கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகளியிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது அதிகாரிகள் மெத்தனப்போக்காக இருப்பதால் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதோடு குற்றச்சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும் காவல்துறையும் இதனை கண்டு கொள்ளவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது மாநகர செயலாளர் பிரவீன் குமார் தலைமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய பேருந்து நிலைய பொது கழிப்பிடங்களில் கட்டண கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் ஆங்காங்கே துர்நாற்றம் வீசுவதை சீர்படுத்தி அவ்வப்போது தூய்மை பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுநீர் கழிக்க மூன்று ரூபாய் கட்டணத்திற்க்கு பதில் 10 ரூபாய் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் புதிய பேருந்து வளாகத்தில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
Post a Comment