சேலத்தில் திமுக, தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
சேலத்தில் திமுக, தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்பாதுளிபட்டி கிராமத்தின் திமுக கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமையில், அக்கட்சியிலிருந்து விலகிய 30க்கும் மேற்பட்டோர் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து, மாவட்ட பிரதிநிதி சரவணன், ஒன்றிய மாணவரணி இணைச் செயலாளர் மாதேஸ்வரன், நல்லா கவுண்டம்பட்டி முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் தருமன் மற்றும் நிர்வாகிகள் செம்பன், ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதேபோல் சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி 13வது வார்டைச் சேர்ந்த திமுக, தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.இந்த நிகழ்வின் போது எடப்பாடி நகரக் கழக செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Post a Comment