சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி முருகன் நகரில் உள்ள நாக கருமாரியம்மன் மற்றும் தட்டான் குட்டை மாரியம்மன் கோயில் 8ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி முருகன் நகரில் உள்ள நாக கருமாரியம்மன் மற்றும் தட்டான் குட்டை மாரியம்மன் கோயில் 8ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக திருநங்கைகள் கலந்து கொண்டு சக்தி கரகம், அக்னி கரகம் எடுத்தும்,நாக்கில் அலகு குத்திக்கொண்டும் வழிபட்டனர்.திருவிழாவில் திருநங்கைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டு ஆடு, கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். நிகழ்ச்சியின் முடிவில் திருநங்கைகளால் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பௌர்ணமியின் இரவு சிறப்பு பூஜை நடைபெற்று திருநங்கையால் அருள்வாக்கு சொல்லப்படுவது இக்கோவிலின் சிறப்பு . திருவிழாவில் தேவி நித்தியநந்தன்,ஸ்வேதா, வீராங்கன் உட்பட ஏராளமான திருநங்கைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Post a Comment