வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்வங்கிகளில் சேவை வரியை குறைக்க வேண்டும் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.
தேசிய மற்றும் மாநில வங்கிகளில் சேவை கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களிடம் பணப்பரிப்பு நடைபெறுவது என குற்றச்சாட்டு தெரிவித்து வங்கிகளில் சேவை வரியை குறைக்க வேண்டும், பெரு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த பெருந்தொகையை வசூலிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக வாராக்கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கிகளின் வேலை நாட்களை ஐந்து நாட்களாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமையில் கோட்டை ஸ்டேட் பாங்க் முன்பு நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் முற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையில் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் கூறும்போது தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30, 31-ஆம் தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தம் செய்யப்படும் எனவும் தமிழகத்தில் 2 லட்சம் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.
போராட்டத்தில் இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். தீனதயாளன், ஏஐபிஇஏ சங்க செயலாளர் எஸ். சம்பத் அதிகாரிகள் சங்க செயலாளர் எஸ். குணாளன், என்சிபிஇ செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்டு வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
Post a Comment