இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை காவல்துறையினர் நடு ரோட்டில் வலுக்கட்டாயமாக துரத்தி பிடிப்பதை கைவிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்
இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை காவல்துறையினர் நடு ரோட்டில் வலுக்கட்டாயமாக துரத்தி பிடிப்பதை கைவிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்.. மத்திய அரசின் உத்தரவையடுத்து இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது கட்டாய நடவடிக்கை காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் மீது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் போலீசார் சாலைகளை வருவோரை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர் காவல்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் காவல்துறையை இந்த அராஜக நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று நடைபெற்றது மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டனக் கோசங்களை எழப்பினர். அப்போது மத்திய அரசு விதித்துள்ள பல மடங்கு தொகையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் சாலையில் நடுவிலும் பாலத்தின் அடியிலும் நின்று இருசக்கர வாகன ஓட்டிகளை குற்றவாளி போல் பிடித்து அவர்கள் மீது அபராதம் விதிக்கும் காவல்துறையின் இந்த முரட்டுத்தனமான நடவடிக்கையை கைவிட வேண்டும் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஸசங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசு இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் பல மடங்கு விதிக்கபட்டுள்ள அபராதத்தை குறைக்க வேண்டும்
Post a Comment