போதைப் பழத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்" நடைபெற்றது.
சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா, I.P.S., அவர்களின் தலைமையில்
சேலம் டவுன் சரகத்தில், சூசன் மஹாலில்,
பொதுமக்களுக்கான "போதைப் பழத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்" நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கஞ்சா, மது, ஹான்ஸ், கூல்லிப் மற்றும் புகையிலை போன்ற பழக்கத்தினால் புற்றுநோய், கிட்னி பாதிப்பு மற்றும் பல நோய்கள் பாதிக்க நேரிடும். எனவே,போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம்!
உயிரை காப்போம், குடும்பத்தை நேசிப்போம்!! என்ற உறுதி மொழியை மாநகர காவல் ஆணையாளர் அவர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் தலைமையகம் திரு.S.ராதாகிருஷ்ணன் அவர்களும், தெற்கு திருமதி.S.P. லாவண்யா அவர்களும், வடக்கு திரு.M.மாடசாமி அவர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment