Header Ads

அடிப்படை வசதிகள் அமைத்து தர வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் மறியல் போராட்டம் முயற்சி.

அடிப்படை வசதிகள் அமைத்து தர வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற முயற்சி மேற்கொண்டதை தொடர்ந்து அதிகாரிகள் பிரச்சனையின் மீது உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.


 சேலம் மாநகரம் 24-வது டிவிஷன் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தையும் மாமன்ற உறுப்பினரையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மேற்கு மாநகர குழு சார்பில் மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டு டிவிஷன் பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது .இதனைத் தொடர்ந்து பிள்ளையார் நகர் பகுதியில் மறியல் போராட்டத்திற்கு முயன்ற போது காவல்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்தி தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.


 மேலும் பிள்ளையார் நகர் பகுதியில் தரமான சாலை சாக்கடை பொதுக்கழிப்பிடம் நீர்த்தேக்க தொட்டி புதுப்பித்து தர வேண்டும் சவுக்காடு பகுதியில் தரமான சாலை வசதி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர அதிகாரிகள் உறுதி அளித்ததன் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது ம,மாநகரகுழு உறுப்பினர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். குணசேகரன், ஐ. ஞானசௌந்தரி மாநகர மேற்கு செயலாளர் எம். கனகராஜ் கிளை செயலாளர்கள் குமரேசன், வரதராஜ பெருமாள், பாலன், நிர்மலா, ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி. ஜெகநாதன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

No comments