சேலம் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள மாநகர, கோட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர், சிற்றூர், கிளைக் கழகங்கள் அனைத்தும் இனிப்பு வழங்கியும் ஒலிபெருக்கிகள் வாயிலாக கழக பாடல்கள் இசைத்தும், கலைஞர், பேராசிரியர், கழகத் தலைவர் ஆகியோரின் கொள்கை உரைகளை ஒலிபரப்பியும், கழக கொள்கைகளை பொது மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும், சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் வருகிற 16-ஆம் தேதி சேலத்தில் பேராசிரியர் பிறந்த தினத்தை ஒட்டி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment