ஓமலூர் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் வராமல், பராமரிக்கப்படாத சுகாதாரமற்ற கழிப்பறையால் நோயாளிகள் அவதி, துர்நாற்றம் வீசுவதாகவும் புகார்
ஓமலூர் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் வராமல், பராமரிக்கப்படாத சுகாதாரமற்ற கழிப்பறையால் நோயாளிகள் அவதி, துர்நாற்றம் வீசுவதாகவும் புகார்
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், உள்நோயாளிகளாக நூற்றுக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மருத்துவமனையில் ஆண்கள் வார்டில் கழிப்பறைகள், வெளிப்புறத்தில் முறையான பராமரிப்பின்றி அசுத்தமாக இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன கழிவறையில் தண்ணீர் வராததால் துர்நாற்றம் வீசுவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகள் பேருந்து நிலைய பொது கழிப்பிடத்தில் சென்று வந்து சிரமப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நோயாளிகளின் படுக்கைகள் தினசரி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதும் இல்லை என கூறினர். ஆகவே ஓமலூர் மருத்துவமனையில் உடனடியாக சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.
Post a Comment