பாமக சார்பில் கிராமம் தோறும் ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் திட்டம் சேலம் அருகே இன்று துவங்கியது.
பாமக சார்பில் கிராமம் தோறும் ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் திட்டம் சேலம் அருகே இன்று துவங்கியது.
சேலம் பாமக வடக்கு மாவட்ட பகுதிகளில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கட்சிப் பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது
அதில் ஒரு பகுதியாக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஏற்காடு மற்றும் வீரபாண்டி பகுதிகளில் கிராமம் தோறும் ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் திட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பைரோஜி கிராமத்தில் இன்று துவங்கியது
மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாநில செயலாளர் மு கார்த்தி பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விஜயராசா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் வேட்டி சேலை மற்றும் பின் தங்கிய குடும்பங்களுக்கு உணவு தானியங்களை வழங்கினர்
முன்னதாக பைரோஜி கிராமத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக கொடியினை கார்த்தி ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகேசன் ஒன்றிய செயலாளர் முனியப்பன் வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் சிவசங்கரன் மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணி நரசிம்மன் சிவராமன் வேல்முருகன் கோவிந்தன் சுபா கோகிலா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment