சேலம் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் இருந்த பேருந்து.லாரி.கார்.ஆட்டோ.இரண்டு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது.
சேலம் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் இருந்த (பேருந்து-1, லாரி-2, கார்-2, ஆட்டோ-6, இரண்டு சக்கர வாகனங்கள்-484 என மொத்தம் 495) வாகனங்களை, மாநகர காவலர் சமுதாயக் கூடத்தில், சேலம் மாநகர தலைமையிட காவல் துணை ஆணையாளர் திரு.S.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், சேலம் மாநகர ஆயுதப்படை கூடுதல் காவல் ஆணையாளர் திரு.M.ரவிச்சந்திரன்,
சேலம் தெற்கு, வட்டார வருவாய் ஆய்வாளர் திருV.P. சரவணன்,
சேலம் தெற்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.ராமரத்தினம், மற்றும் சேலம் மாவட்ட அரசு தானியங்கி செயற்பொறியாளர் திருமதி.தேவப்பிரியா அவர்கள் முன்னிலையில், பொது ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் 292 நபர்கள் கலந்து கொண்டார்கள். பொது ஏலத்தின் மூலம் மொத்தம் ரூபாய் 35,27,000/- அரசுக்கு ஆதாயம் செய்யப்பட்டது.
Post a Comment