எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்த பாமக சட்டமன்ற உறுப்பினர்... கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி...
எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்த பாமக சட்டமன்ற உறுப்பினர்... கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி...
சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் கபடி உள் விளையாட்டு அரங்கத்தை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார் தொடர்ந்து கபடி போட்டி துவக்கி வைத்து வீரர் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியின் நிறைவில் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்கள் வந்தார் அப்பொழுது மேடையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காலில் விழுந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனை சினிமா பாணியில் எதுவும் கண்டு கொள்ளாத மாதிரி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த தொண்டரை கவனிக்க தொடங்கினார் இதனால் மேலும் பரபரப்பு உண்டானது
எடப்பாடி பழனிச்சாமி தன்னை கவனிக்கவில்லை என்று அந்த பக்கமும் இந்த பக்கமும் தினறிய சட்டமன்ற உறுப்பினர் இறுதியாக அவரது பார்வையில் படும்படி இடது பக்கம் சென்று நின்றார் அப்போது விழா குழு சார்பில் அவருக்கு சால்வை அணிவிக்கும் படி அவர் தெரிவித்ததையடுத்து அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டதுஅதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காலில் பாமக சட்டமன்ற உறுப்பினர் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Post a Comment