நகர்புற வாழ்வில் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் வீடுகள் ஒதுக்கப்படுவது நிறுத்தப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு .
நகர்புற வாழ்வில் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் வீடுகள் ஒதுக்கப்படுவது நிறுத்தப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ..
மத்திய அரசின் சார்பில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக் கொள்ள இரண்டு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது இதனால் ஏளமான ஏழை எளிய மக்கள் இதனை பெற்று வீடு கட்டி வந்தனர் இந்த நிலையில் திடீரென வீடு ஒதுக்கீடு செய்வது நிறுத்தப்பட்டதால் ஏற்கனவே வீடு கட்டுவதற்காக ஆணை பெற்ற பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் வீடு கட்டுவதற்கு உரிய மானியம் மத்திய அரசு இடமிருந்து வராததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பலமுறை இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது இதனையடுத்து 100க்கும் மேற்பட்டோர் இன்று பெரம்மனூர் பகுதியில் உள்ள நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு கழக கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய அரசு தங்களுக்கு முறையாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் தங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில் பாராபட்சம் காட்டக்கூடாது முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திரளாக பங்கேற்றனர்.
Post a Comment