Header Ads

ஆத்தூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இதில் அதிமுக நகர செயலாளர் அ.மோகன் அனைவரையும் வரவேற்று பேசினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.


ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.நல்லதம்பி, கு.சித்ரா முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் எஸ்.மாதேஸ்வரன், அ.மருதமுத்து, ஆர்.எம்.சின்னதம்பி, மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.


சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நரசிங்கபுரம் நகர செயலாளர் எஸ்.மணிவண்ணன் நன்றி கூறினார்.

No comments