ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு8 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் அமாவாசை ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு8 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. வடமாலை துளசி மாலை எலுமிச்சம் பழம் மாலை ஆகிய பல்வேறு புஷ்பங்களால் மாலைகள் அணிவித்து வழிபாடு செய்தனர். விழா குழு சார்பில் விழாவில் கலந்து கொண்ட சுமார் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் பாலித்தார். விழாவிற்கான .ஏற்பாடு.களை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரங்க சங்கரயா தலைமையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
Post a Comment