Header Ads

ஓமலூர் அருகே மெகா வேலைவாய்ப்பு முகாம்.

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓமலூர் அருகே மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது . இதில் கலந்து கொண்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கி பேசினார் 


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை  சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் சுமார் 320-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்த முகாமில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தாங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலை வழங்கும் நிறுவனங்களை அணுகி வேலையை பெற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கான பணி ஆணையை வழங்கி பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து எட்டாயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களிலே வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம் படித்திருக்கின்ற இளைஞர்கள் குறிப்பாக ஐடிஐ பாலிடெக்னிக் இன்ஜினியர் அனைவருக்கும் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு உள்ளது படித்துவிட்டு எங்கு வேலைக்கு செல்வது என தெரியாத உள்ள இளைஞர்களுக்கு தமிழக முதல்வர் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கியுள்ளார் அதனுடைய முகவரியில் சென்று தேடினால் எப்படி பயிற்சி பெற வேண்டும் எப்படி வேலை தேட வேண்டும் எங்கெங்கு வேலை உள்ளது என்கின்ற தகவல்களை பெற்று பயன் பெற முடியும் இதில் இதற்கான வசதிகளை ஏற்படுத்தி உள்ளது இதன் மூலமாக கல்லூரிகளிலே இளங்கலை பட்டப்படிப்பு முதுகலை பட்டப்படிப்பை படித்துள்ள மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து இதன் மூலம் வேலைகளை பெற முடியும் பொறியியல் படிக்கும் இளைஞர்களுக்கும் நான் முதல்வன் திட்டம் மூலமாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தற்போது தனியார் நிறுவனங்களுக்கும் படித்த இளைஞர்களுக்கும் வேலை இணைக்கும் பாலமாக இந்த துறை செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி எம்எல்ஏ என பாகுபாடு இல்லாமல் வேலைவாய்ப்பு முகாமை நடத்த வேண்டும் என கூறியுள்ளார் அதன் அடிப்படையில் இன்று சேலத்தில் நடைபெற்று வருகிறது இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர் இதுவரை 1500 பேருக்கு பணி ஆணை தயாராக உள்ளது நாள் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பேருந்து வசதி காலை உணவு மதிய உணவு மீண்டும் இல்லத்திற்கு செல்லும் வகையில் அனைத்து வசதிகளும் உரிய வகையில் ஏற்பாடு செய்து உள்ளோம் குறிப்பாக காவல்துறை தீயணைப்பு துறை மருத்துவ துறை மாவட்ட நிர்வாகம் முழுவதும் இதில் ஈடுபட்டு மிகச் சிறப்பாக செய்துள்ளது இதுவரை 67 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்கள் குறிப்பாக கவனம் இல்லாமல் இடையில் விடுபட்டவர்களையும் மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு வழங்கியுள்ளோம் தமிழகத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம், அயல் நாடுகளில் சென்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தொழில் நிறுவனங்களை இங்கு கொண்டு வந்து அதன் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம் மேட்டூரில் திமுக நிர்வாகி தீக்குளித்தது குறித்து கேட்ட பொழுது மாண்புமிகு முதல்வர் தற்போது தொலைபேசியில் கூறியுள்ளார் நான் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனைவரும் நேரில் சென்று உரிய மரியாதை செலுத்த உள்ளோம் மேல் நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார் என கூறினார்.

No comments