சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பாரம்பரியமிக்க பழங்கால உணவுகளை உள்ளடக்கிய உணவு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி மற்றும் டான் மில்லட் நிறுவனமும் இணைந்து நடத்தும் சர்வதேச சிறுதானியங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ சக்தி கைலாஷ் கல்லூரியில் ஊட்டச்சத்து உணவியல் துறை சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் தலைவர் கைலாசம் தலைமையிலும்மற்றும் கல்லூரி முதல்வர் ஜெயந்தி வரவேற்புரையுடனும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட மாணவியர்கள் மற்றும் சுய தொழில் முனைவோர்கள் வைத்திருந்த பழங்கால உணவு பொருட்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
Post a Comment