Header Ads

சேலம் மாநகரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்.

சேலம் மாநகராட்சி மன்ற கூட்டம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்களை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் குறிப்பாக சேலம் மாநகரில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் பொதுமக்கள் வீதிகளில் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது தினந்தோறும் தெரு நாய் கடித்து ஏராளமான பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரு நாய்களை பிடிப்பதில் தற்போது உள்ள நடைமுறைகளை மாற்றி பெண் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தினால் சேலம் மாநகராட்சி யில் தெருநாய்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய வேண்டும் தெரிவித்தனர்



 அதேபோல சேலம் மாநகரில் பல்வேறு பணிகளுக்காக திட்ட மதிப்பீடு கூடுதலாக உள்ளது ஒவ்வொரு திட்ட மதிப்பீட்டிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற வாய்ப்புள்ளதால் இந்த திட்டம் மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது

இதேபோல சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது மேலும் சேலம் மாநகராட்சியில் என தனி குடிநீர் திட்டம் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த்

முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்ட நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதற்கான ஒரு குழு நியமனம் செய்யப்பட்டது அந்த குழு சேலம் மாநகரின் பல்வேறு பகுதியில் ஆய்வு செய்ததோடு வீணாக்கும் குடிநீர் பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்றுவது மேலும் குடிநீர் வினியோகத்தை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு கள ஆய்வு செய்து இறுதியில் ஒரு அறிக்கையை மாநகர மேயரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது இதன் படி 80 கோடி ரூபாய் இருந்தால் போதும் சேலம் மாந அருகில் 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது இந்த அறிக்கையின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்த அறிக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது 

இதனால் சேலம் மாநகராட்சியில் தனி குடிநீர் திட்டம் காலாவதியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது தொடர்ந்து அவசர திருமணம் நிறைவேற்றப்பட்டு மன்ற கூட்டம் நிறைவடைந்தது.

No comments