தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தீனதயாளன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு உடனடியாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது, 8 ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவது ,சுகாதார ஆய்வாளர்களுக்கு சிறப்பு ஊக்குத்தொகை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்டம் முன்னாள் தலைவர் முருகப்பெருமான், சங்கத்தின் மாநில பொருளாளர் மணிவண்ணன், மாநில இணைச்செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment