சாலை பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற மினி மாராத்தான்.
சாலை பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற மினி மாராத்தான்.
சாலை பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற மினி மாராத்தான் ஓட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராகுல் ஸ்போர்ட்ஸ் மற்றும் யூத் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் சேலத்தில் மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. சாலை பாதுகாப்பு , போதை தடுப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மினி மராத்தான் ஓட்டத்தை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.. இதில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 2 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர், 13 கிலோமீட்டர் என மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஓட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 1000 -க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Post a Comment