ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிய செல்லப்பிராணியை மீட்ட போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து பணியில் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யாவு ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது வழியாக வந்த பொதுமக்கள் தண்டவாளத்தில் நாய் ஒன்று அடிபட்டு இறந்து கிடப்பதாக சிறப்பு உதவி ஆய்வாளரிடம் தெரிவித்தனர்.
இதனை யடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யாவு தண்டவாளத்தில் இருந்த செல்லப்பிராணியை பார்த்தபோது காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது உடனடியாக அவரிடம் இருந்த கைகுட்டையை தண்ணீரில் நினைத்து காலில் கட்டி விட்டு உணவு வழங்கினார். இதனை யடுத்து சிறிது நேரத்தில் ஒரு காலை இழந்த செல்லப்பிராணியான நாய் சுதாரித்துக் கொண்டு மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கியது நடக்கத் துவங்கியதை பார்த்த சிறப்பு உதவி ஆய்வாளர் மன மகிழ்ச்சி அடைந்தார்
இது குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யாவுவிடம் கேட்டபோது 4.45 மணி அளவில் விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் சென்றது அப்போது நாய் அடிப்பட்டு இருக்கலாம் என்றும் பொதுமக்கள் தந்த தகவலின் அடிப்படையில் சென்று பார்த்த போது அது உயிருடன் இருந்ததாகவும் காலில் அடிபட்டு ரத்தம் அதிக அளவில் வெளியேறி இருந்தது எனவும் தெரிவித்தார் பின்னர் தனது கை குட்டையால் அதற்கு கட்டுப்போட்டு சாப்பிடுவதற்கு உணவு வழங்கிய பின் சுதாரித்துக் கொண்டு சென்றது இல்லையென்றால் ஆறு மணிக்கு அடுத்து வரவுள்ள ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்க கூடும் என தெரிவித்தார்
ரயிலில் மனிதர்கள் அடிபட்டு இருந்தாலே யாரும் கண்டு கொள்ளாமல் செல்லும் இந்த காலகட்டத்தில் செல்லப் பிராணியான நாய் ரயிலில் அடிபட்டு இருந்ததை பார்த்து சிறப்பு உதவி ஆய்வாளர் மனிதநேயத்துடனும் கருணை உள்ளத்துடனும் காப்பாற்றிய இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Post a Comment