சேலம் புத்தக கண்காட்சி 4ம் தேதி வரை நீட்டிப்பு.
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தக கண்காட்சி கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த புத்தக கண்காட்சி வருகின்றனர்.
இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த புத்தக கண்காட்சியை பார்வையிட்டு வரும் நிலையில் சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் புத்தக கண்காட்சிக்கு வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புத்தக கண்காட்சி கண்காட்சியை வருகின்ற நான்காம் தேதி வரை நீட்டிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்
புத்தக வாசிப்பாளர்களின் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புத்தக கண்காட்சி நான்காம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே பொதுமக்களும் புத்தக ஆர்வலர்களும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Post a Comment