Header Ads

சேலத்தை அடுத்துள்ள நாழிகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் சமையலறை மற்றும் கழிவறை கட்டுவதற்கான பூமி பூஜை.

சேலம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை.....


சேலத்தை அடுத்துள்ள நாழிகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் சமையலறை மற்றும் கழிவறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.


பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பானுமதி தலைமையில் நடைபெற்ற இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினருமான பாரப்பட்டி சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் ஊர் பஞ்சாயத்து தலைவர் கணேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments