சேலம் மாநகரில் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் புகுந்ததால் வாங்கிய பொருளை தண்ணீரில் மிதக்க விட்டு இழுத்துச் சென்ற வாலிபர்.
சேலம் மாநகரில் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் புகுந்ததால் ஆட்டோ செலவை மிச்சப்படுத்திய வாலிபர்.. வாங்கிய பொருளை தண்ணீரில் மிதக்க விட்டு இழுத்துச் சென்ற வினோதம்
சேலம் மாநகரில் இன்று மாலை பலத்த மழை பெய்தது இதனால் சேலம் கடை வீதி அக்ரஹாரம் சின்னக்கடை வீதி கல்லாங்குத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது மேலும் பாதாள சாக்கடைக்காக வெட்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது
இந்த நிலையில் கல்லாங்குத்து பகுதியில் தன் வீட்டிற்கு வைப்பதற்காக 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க்கை வாங்கி உள்ளார் அதனை தனது வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக ஆட்டோ தேடிய போது பலத்த மழை மழை பெய்தது இதனால் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது இதன் காரணமாக சாலைகளில் எந்த வானத்தையும் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இதனை பயன்படுத்திக் கொண்ட வாலிபர் ஒருவர் வாங்கிய தண்ணீர் டேங்க்கை தண்ணீர் மீது வைத்து தள்ளி சென்றது அனைவரையும் கவனத்தை ஈர்த்தது கடையிலிருந்து மேடான பகுதி வரை தண்ணீர் டேங்க்கை மழை நீரில் வைத்து தள்ளிச் சென்று மேடான இடத்திற்கு சென்றதும் தண்ணீர் டேங்க்கை தலை மீது தூக்கி வைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு புறப்பட்டார் இதனால் ஆட்டோ செலவு மிச்சமானதாகவும் வாலிபர் தெரிவித்துள்ளார்
மழையின் காரணமாக சேலம் மாணவரின் பல்வேறு பகுதிகளில் இதே போல் தண்ணீர் சாலைகளில் செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகியுள்ளனர் இதனால் இது போன்ற வினோத சம்பவங்களும் அடிக்கடி நடந்தவண்ணம் தான் உள்ளது எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மாநகராட்சி இதுபோன்ற சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Post a Comment