சேலம் மாவட்டம் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்.
சேலம் மாவட்டம் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் சேலம் அண்ணா பூங்கா எதிரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் அப்பாதுரை, மாவட்ட பொருளாளர் மாதவன் ஆகியோர் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டு புதிய நிர்வாகிகளாக பி.அன்பு (எ) அன்பழகன் தலைவர், பி.ராஜ் செயலாளர்,எல்.ஆர்.மார்கோணி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகளும், பகுதி பொறுப்பாளர்களும், பணிமனை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment