சேலம் கே.ஆர்.தோப்பூரில் சேலம் சாலையில் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்...
சேலம் கே.ஆர்.தோப்பூரில் சேலம் சாலையில் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்...
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ள கே. ஆர். தோப்பூர் சேலம் செல்லும் சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து வருவதாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது 'இந்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து வருவதால் தங்களது அன்றாட வாழ்க்கை பாதிப்படைகிறது என்பது மட்டுமில்லாமல் தங்களின் வாழ்வாதாரமான ஆடு மாடுகள், கோழி போன்ற வளர்ப்பு பிராணிகள் இறந்து போய்விடுகிறது. இதைப்பற்றி எத்தனையோ முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்தான் இந்த சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினோம்.அரசு அதிகாரிகள் உடனடியாக இந்த தண்ணீர் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் தாரமங்கலம் காவல்துறை ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களின் போராட்ட காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Post a Comment