சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி படகுதுறை இடிந்து விழுந்ததால் பரப்பரப்பு பெரும் விபத்து தவிர்ப்பு.
சேலம்மாவட்டம் எடப்பாடி அடுத்து பூலாம்பட்டி பேரூராட்சியில் காவிரி ஆற்றில் விசைபடகு போக்குவரத்து செயல்பட்டுவருகிறது. சேலம்மாவட்ட எல்லையான பூலாம்பட்டியிலிருந்து பெரியார் மாவட்டம் நெரிஞ்சி பேட்டைக்கு தினந்தோரும் 1000 க்கும் மேற்பட்டோர் விசைப் படகுமூலம் சென்று வருகின்றனர் .
இந்த நிலையில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் கடந்த இரு நாட்களாக பாதுகாப்புகருதி விசைபடகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது . தொடர்ந்து படகுதுறையில் தடுப்புகள்ஏற்படுத்தி மக்கள் காவிரி கரையோரம் செல்ல தடைவிக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்
இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பூலாம்பட்டி காவிரியாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது ..இந்நிலையில் பூலாம்பட்டி படகுதுறையின் கரை ஏற்கனவே விரிசல் விட்ட நிலையில் இருந்ததாலும் தற்போது இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று அதிகாலையில் படகுதுறை கரை முழுவதும் இடிந்து ஆற்றில் விழுந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது
இந்தக் பூலாம்பட்டி படகு துறை கரையோரத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த இடத்திற்கு வந்து செல்வது வழக்கம் எனவே ஆள் நடமாட்டம் இல்லாத இந்த விபத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.படகுதுறை இடிந்து விழுந்த தகவல் அறிந்த பூலாம்பட்டி செயல் அலுவலர் ஜீவாநந்தன் மற்றும் பூலாம்பட்டி காவல்துறையினர் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்
Post a Comment