சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகமானது கடந்த மாதம் ஏழாம் தேதி நடைபெற்றது.
சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகமானது கடந்த மாதம் ஏழாம் தேதி நடைபெற்றது.
நான்கு ஆண்டுகளாக திருப்பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது, இவ்வாறு இருக்க சுகவனேஸ்வரர் ஆலயத்தில் வலம்புரி விநாயகர் சன்னதியில் (இரட்டை பிள்ளையார்) மழை நீர் கசிவு உள்ளே கொட்டிக்கொண்டே இருக்கிறது.
அடுத்ததாக முருகன் சன்னதியில் மழைநீரானது கசிந்து கொண்டே இருக்கிறது இது அங்குள்ள மின்சார பெட்டியின் மேலே கொட்டிக் கொண்டிருக்கிறது, ஆபத்தை உணராமல் அலட்சியமாக உள்ளது இந்து அறநிலைத்துறை.
அதுபோக நவகிரகத்திற்கு எதிராக ஸ்ரீசிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி உள்ளார். ஆனால் இவர்களோ ஸ்ரீசிவசக்தி ஸ்ரீஆஞ்சநேயர் என்று ஆஞ்சநேயர் பெயரையே மாற்றி எழுதியுள்ளார்கள் இதுதான் இந்து சமய அறநிலைத்துறையின் லட்சனமா என்ற கேள்வி எழுப்பி உள்ளார்
பாரதிய ஜனதா கட்சி
மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.பி கோபிநாத்.
Post a Comment