வருமுன் காப்போம் சிறப்பு சிறப்பு முகாம்.
சேலம் மேற்கு தொகுதி, செட்டிச்சாவடி ஊராட்சி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தேன்.மருத்துவ முகாமில் உடல், ரத்த, கண் பரிசோதனைகள், சித்த மருத்துவம், கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உபகரணங்கள், முதியோர்களுக்கு மாதாந்திர மாத்திரை பொருள்கள் வழங்கப்பட்டது ...மருத்துவ முகாமை தொடங்கி வைத்து இரா.அருள் எம்எல்ஏ பேசும்போது தமிழ்நாடு அரசு கொரோனாவுக்கு பிறகு அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவையை வீடு தேடி கொடுக்க வேண்டும் என உயர்ந்த அடிப்படையில் செய்து வருகிறது, இதுபோன்ற மருத்துவ முகாம்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டார்வரவேற்பு வெற்றி வேந்தன் சுகாதார ஆய்வாளர்,ஜெயந்தி வட்டார மருத்துவ அலுவலர் நிலையம் கன்ணங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா, கார்த்திக்,துணைத் தலைவர் பரிமிளா கோவிந்தராஜ்,கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் செல்வராஜ், டாக்டர் விஜயகுமாரி,செல்வம் ராஜா விநாயகம் பட்டி ராஜா ஆறுமுகம் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment