சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குடியிருப்பு வீட்டில் மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குடியிருப்பு வீட்டில் மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்மன் நகரில் வசிக்கும் வரதராஜன் என்பவர் தனது மின்சார ஸ்கூட்டரை வீட்டில் சார்ஜ் போட்டு விட்டு அரை மணி நேரம் கழித்து வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் வீட்டிலிருந்த தண்ணீரை ஊற்றி கொழுந்து விட்டு எரிந்த ஸ்கூட்டரை மேலும் தீ பரவாமல் தடுக்க முயற்சித்தனர். பின்னர் இதுகுறித்து எடப்பாடி தீயணைப்புத்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீர் பீச்சியடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். குடியிருப்பு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Post a Comment