Header Ads

பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி;வரும் 28ல் பால் நிறுத்த போராட்டம்.

பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி;வரும் 28ல் பால் நிறுத்த போராட்டம்..!


பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் சேலத்தில் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 

குறிப்பாக வருகின்ற 28ஆம் தேதி முதல் தமிழகத்தில் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது இது குறித்து மாநில தலைவர் ராஜேந்திரன் கூறும் போது;

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் ஒரு லிட்டருக்கு 42 ரூபாயும் , எருமை பாலுக்கு 51 ரூபாயும் என கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடைபெற உள்ளது. வரும் 26 ஆம் தேதிக்குள் அரசு, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படவில்லை எனில் அடுத்து வரும் 28 ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்... இந்த போராட்டத்தை மாநிலம் முழுவதும் தீவிரபடுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனம் செயல்பட வேண்டும் என்றும் தனியார் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக கொள்முதல் விலையை கொடுத்து வாங்கும் போது ஆவின் நிறுவனம் மட்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்த மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.இந்த கூட்டத்தில் பால் உற்பத்தியாளர் நலச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்

No comments