தலைவாசல் அருகே சோகம்..2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு.
சேலம் தலைவாசல் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சாத்விக் என்ற குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்பிரியா இவர்களுக்கு சாத்விக் என்கிற 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று மாலை வீட்டின் வெளியே விளையாடி கொண்டு இருந்த குழந்தை அவர்களது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் திடிரென தவறி விழுந்துள்ளது. தொட்டி தண்ணீரில் விழுந்த குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு குழந்தையின் தாய் ஒடி வந்து குழந்தையை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் எற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த தலைவாசல் போலிசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment