தமிழகத்தில் மாலை நேர உழவர் சந்தைகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின்போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, ஆக.12-ம் தேதி முதல் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 இடங்களில் (சென்னை தவிர) தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளன. இங்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். ஆக.12-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இவற்றை திறந்து வைக்கிறார். திருச்சி, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட சில இடங்களில் முன்னோட்டமாக மாலை நேர உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment