Header Ads

தமிழகம்சேலம் நகரமலை அடிவாரத்தில் கண்ணீர் புகைகுண்டு வீச 200 போலீசாருக்கு பயிற்சி: 753 குண்டுகள் பயன்படுத்தினர்.

 கண்ணீர் புகைகுண்டு வீசுவது குறித்து சேலத்தில் 200 போலீசாருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதற்காக 753 குண்டுகள் பயன்படுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக கலவரம் ஏற்பட்டது. தடியடி நடத்தி அவர்களை போலீசார் கலைத்தனர். இதையடுத்து அனைத்து போலீசாருக்கும் கண்ணீர் புகைகுண்டு வீசுவது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, சேலம் மாநகர காவல்துறை சார்பில் நகரமலை அடிவாரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் நேற்று காலை பயிற்சி நடந்தது. இதில் 200 போலீசார் கலந்து கொண்டனர்.
 
இவர்களுக்கு கண்ணீர் புகை குண்டை எப்படி கூட்டத்திற்கு நடுவே வீசுவது என்று பயிற்சி வழங்கப்பட்டது. இதில் துப்பாக்கியால் சுடுவது மற்றும் வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகைகுண்டுகளை எவ்வாறு போடுவது என்பது குறித்தும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. காலாவதியாகும் நிலையில் இருந்த 753 குண்டுகள் மூலமாக அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

No comments