நடிகர் தளபதி விஜய் பிறந்த நாள் விழா
ஜூன் 22 மக்கள் தலைவர் தளபதி விஜய் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு
சேலம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1200 நபர்கள் இரத்த தானம் வழங்க இலக்கு நிர்ணயித்து, இன்று முதற்கட்ட மாபெரும் இரத்ததான முகாமை சேலம் மாவட்ட தலைவர் தமிழன் ஆ. பார்த்திபன் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை இரத்த வங்கிக்கு சேலம் மாநகர இளைஞரணி மற்றும் ஓமலூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் 120 நபர்கள் இரத்த தானம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சேலம் கிழக்கு மாநகர தலைவர் சாகுல் மற்றும் அம்மாபேட்டை பகுதி தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சேலம் மாநகர இளைஞரணி தலைவர் வசந்த்,ஓமலூர் தெற்கு ஒன்றிய தலைவர் பெருமாள் மற்றும் ஓமலூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மணி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணை தலைவர் கேபிள் சதீஷ்,மாவட்ட ஆலோசகர் மணிகண்டன் மாவட்ட பேச்சாளர் சண்முகம், மாவட்ட PRO கார்த்திக் மற்றும் அரசு மருத்துவ குழுவோடு இணைந்து சேவை புரிந்த குகை பகுதி நிர்வாகிகள் கார்த்திக், பிரபாகரன் ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு அசைவ உணவு வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக சேலம் மாவட்ட அனைத்து நகர, ஒன்றிய,பகுதி வாரியாக இரத்த தான முகாம் தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாள் விழாவாக நடைபெற இருக்கிறது.
Post a Comment