சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கண்டித்தும்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கண்டித்தும், சீமானின் உருவ படத்தை கிழித்தும், செருப்பால் அடித்தும், சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஏ.பி. பாஸ்கர் தலைமை தாங்கினார்.
இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் கரன்சிங், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அரவிந்த், ரத்தினவேல் பாண்டியன் அருண், விஜயராஜ், ரேவதி, சரண்யா, தெற்கு சட்டமன்ற துணைத்தலைவர் சிவ கணேஷ், வடக்கு சட்ட மன்ற துணை தலைவர் சரண்யா ,அரவிந்த் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ராஜ் பாலாஜி, பூபதி, தமிழரசன், சுகுமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment