சேலம் திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி ரசிகர்கள் கொண்டாட்டம்.
சேலம் திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி ரசிகர்கள் கொண்டாட்டம். சேலம் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் புகழ் பெற்ற திரையரங்குகளான ராஜ சபரி மற்றும் கைலாஷ் பிரகாஷ் திரையரங்கில் இன்று திரையிடப்பட்டது.இதில் மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் தர்மராஜ்,பொருளாளர் நடராஜ் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் குறவன் குறத்தி நடனமாடி, தாரை தப்பட்டை,பேண்ட் வாத்தியங்கள் முழங்க திரைப்பட பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி பட்டாசு வெடித்துக் கோலாகலமாக கொண்டாடினர். மேலும் திரைப்படம் வெள்ளிவிழா காண ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Post a Comment