Header Ads

தமிழக அரசின் ஓராண்டு ஆட்சி கால சாதனையை அடுத்து இரண்டாம் வருட துவக்க விழாவை யொட்டி சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா.

தமிழக அரசின் ஓராண்டு ஆட்சி கால சாதனையை அடுத்து இரண்டாம் வருட துவக்க விழாவை யொட்டி சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோதலில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது திமுக. கடந்த ஆண்டு இதே நாளில் (மே 7, 2021) முதல்வராக பொறுப்பேற்றாா் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகம் வந்த அவா் ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டாா். கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூ.4,000, பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்துக்கு என தனித் துறை அமைப்பு உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினாா்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் 130-க்கும் கூடுதலான தொழில் முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தொழில் துறையைப் போன்றே கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், தொழில் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.2,500 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு என ஏராளமான கவனிக்கத்தக்க திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஓராண்டு சாதனை  கொண்டாடும் விதமாக தமிழக முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் 
அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசின் ஓராண்டு கால அரும் பணிகளின் அணிவகுப்பு என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழா சேலம் ஒன்பதாவது கோட்டத்திற்கு உட்பட்ட மன்னார் பாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது.


ஒன்பதாவது கோட்ட மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் துணை மேயர் சாரதாதேவி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துதாஸ் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


இந்த நிகழ்ச்சிக்கு அரசுத்துறை அதிகாரிகள் கட்சி பிரமுகர்கள் தன்னார்வ தொண்டு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments