தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் இரங்கல் தெரிவிக்கும் வகையில் சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் இரங்கல் தெரிவிக்கும் வகையில் சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்புக்கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில், தஞ்சையில் நிகழ்ந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்தக்கூட்டத்தில் சேலம் மாநகராட்சியின் 44 ஆவது வார்டு உறுப்பினர் இமயவர்மன் கருப்புத்துணியால் கண்களை கட்டிக்கொண்டு பங்கேற்றார். சேலம் மாநகராட்சியில் பட்டியலினத்தை சேர்ந்தவர் மற்றும் இஸ்லாமியர்கள் 7 பேர் இடம்பெற்றிருந்த போதிலும் மண்டலத்தலைவர்கள், நிலைக்குழுத்தலைவர் உள்ளிட்ட பதவிகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டி அதற்கு கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பேசுகையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் எனவே திட்டத்தை விரைந்து முடித்து அனைத்து பகுதிகளிலும் முறையான சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதேபோல் சேலம் மாநகராட்சியில் தூய்மையான நகரமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்த ஒரு மஞ்சள் பை திட்டம் குறித்து அனைத்து வார்டுகளிலும் விழிப்புணர்வு இயக்கங்களை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தக்பட்டது.
Post a Comment