சேலம் மாவட்டத்தில் திமுக அமைப்புகழக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
சேலம் மாவட்டத்தில் திமுக அமைப்புகழக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது
மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் பதவிக்கு ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்தனர் .திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்புகழக தேர்தலை நடத்தி முடிக்க திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது இதன் அடிப்படையில் இன்று முதல் திமுக அமைப்புகழக தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது
சேலம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் பொறுப்பாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தலைமை கழக பிரதிநிதி சி ஹெச் சேகர் வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் கன்னங்குறிச்சி கருப்பூர் காடையாம்பட்டி ஓமலூர் ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட இடங்களில் போட்டியிடும் நிர்வாகிகள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் உரிய கட்டணத்துடன் பெற்றுக்கொள்ளப்பட்டது இந்நிகழ்ச்சியில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இதேபோல் மாவட்ட கழக பொறுப்பாளர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 29ம் தேதி தொடங்க உள்ளதாக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார் அன்றைய தினம் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment