சேலம் மாவட்ட அளவிலான வங்கிகளின் காலாண்டு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
எளிய சாமானிய மக்களுக்கு அரசு திட்டங்களின் கீழ் கடன் வழங்காமல் வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார். இதேநிலை நீடித்தால் வங்கி முன்பாக போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சிரிக்கை விடுத்தார்.
சேலம் மாவட்ட அளவிலான வங்கிகளின் காலாண்டு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர்,
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முத்ரா கடன் ,கல்விக்கடன், தொழில்கடன் முறையாக வழங்கப்படுவதில்லை
பணம் படைத்தவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கும் வங்கி அதிகாரிகள் சாமானிய எளிய மக்களுக்கு கடன் வழங்குவதில்லை என்றும் குறிப்பாக கிராமத்திலிருந்து கடன் கோரி வருபவல்களை ஆங்கிலம், இந்தி மொழியில் பேசி புறக்கணிப்பதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும், மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதில் 80 விழுக்காடு வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் இதனால் ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், கடன் வழங்குவதில் வங்கி அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும்; இந்த விவகாரத்தில் பட்டியலின மக்கள் முழுமையாக புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் கூறிய பார்த்திபன் கொடுக்கப்பட்ட இலக்கில் கடன் வழங்குவதில்லை; குறிப்பாக வடமாநிலங்களில் வரங்குவது போல் தமிழகத்தில் கடன் வழங்கப்படுவதில்லை என்றார். வங்கி நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தில் தனித்தனியாக புகார் தெரிவிப்பேன் என்று வங்கி அதிகாரிகளிடையே கூறிய அவர் இதே நிலை நீடித்தால் வங்கி முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.
இவரைத்தொடர்ந்து பேசிய நாமக்கல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் பேசுகையில், சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் ரூபாய் 10 ஆயிரம் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் அதனால் அவர்கள் கந்து வட்டியின் பிடியில் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையை தவிர்க்க சாலையோற வியாபாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடனை வழங்கி முறையாக வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Post a Comment